உனக்கு என்ன அருகதை இருக்கிறது...! இயக்குனர் அமீரை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் பேரரசு...!

Published : Aug 26, 2019, 12:44 PM ISTUpdated : Aug 26, 2019, 12:45 PM IST
உனக்கு என்ன அருகதை இருக்கிறது...!  இயக்குனர் அமீரை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் பேரரசு...!

சுருக்கம்

இயக்குனர் சேரனை யாரும் வலுக்கட்டாயப்படுத்தி பிக்பாஸ் இல்லத்தில்  அடைக்க வில்லை, அவராக விருப்பப்பட்டுத்தான்  அங்கு சென்றுள்ளார், இது அவரின் தனிப்பட்ட  விருப்பம், இப்படியிருக்க, அவருக்கு என்ன சூழல் என்று தெரிந்து கொள்ளாமல் அவரை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. 

பிக்பாஸ் வீட்டிலுள்ள  சேரனை விமர்சித்து பேசிய இயக்குனர் அமீருக்கு இயக்குனர் பேரரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேரனின் பொருளாதார சிக்கல்களை அமீர் தீர்ப்பாரா எனவும்  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்காஸ் சீசன் 3 ல் - இயக்குனர் சேரன் பங்கேற்று  விளையாடிவருகிறார், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக போட்டியாளர் மீரா மிதுன், சேரன் தன்னை குறிப்பிட்ட இடத்தில் கை வைத்து தள்ளினார் என்று புகார் தெரிவித்திருந்தார், பின்னர் குறும்படம் வெளியிட்டு  அந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, அப்போது சேரன் என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான் இந்த போட்டிக்கே வந்தேன் இதையெல்லாம் சகித்துக்கொள்கிறேன் என்று கதறி அழுதார்.  

இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இதை விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர், தேசிய விருது பெற்ற இயக்குனரும், நான் பார்த்து வியந்த இயக்குனர்களில் ஒருவருமான சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான அவமானங்களை சந்தித்து வருகிறார், அவர்படும் அவமானங்களை என்னால் சகிக்க முடியவில்லை, அவரை இந்த வீட்டிற்குள் நுழைந்து அப்படியே தூக்கிவந்துவிடலாம் போல் இருக்கிறது  என்றும், இதெல்லாம் அவருக்கு தேவையா என்றும் கூறியிருந்தார்.  

இந்நிலையில் அமீரின் கருத்துக்கு பதலடி கொடுத்துள்ளார் இயக்குனர் பேரரசு, இயக்குனர் சேரனை யாரும் வலுக்கட்டாயப்படுத்தி பிக்பாஸ் இல்லத்தில்  அடைக்க வில்லை, அவராக விருப்பப்பட்டுத்தான்  அங்கு சென்றுள்ளார், இது அவரின் தனிப்பட்ட  விருப்பம், இப்படியிருக்க, அவருக்கு என்ன சூழல் என்று தெரிந்து கொள்ளாமல் அவரை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.  பிக்பாஸ் இல்லத்தில் இருந்து அவரை தூக்கிவர வேண்டும் என்று சொல்லும் இயக்குனர் அமீர் அவரின் பொருளாதாரப்பிரச்சனைகளை தீர்ப்பாரா என்றும் கேள்வி  எழுப்பியுள்ளார். அஜித், மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி ஹூரோக்களை வைத்து படம் இயக்கியவர் பிரபள  இயக்குனர் பேரரசு என்பது குறிப்பிடதக்கது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!