பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்கள்...! அதிரடியாக பேசிய பா.ரஞ்சித்...!

 
Published : May 02, 2018, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்கள்...! அதிரடியாக பேசிய பா.ரஞ்சித்...!

சுருக்கம்

director pa.ranjith about sexual harresment

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது :-

பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். நமக்காக நாம பேசுகிறோம்னு பார்க்கும் போது அதை நான் ரொம்ப சூப்பரா பார்கிறேன்.ஒதுக்குதல் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதை போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பா இன்று வரையில் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய் தான் இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன். 

இந்த சங்கம் நிச்சயமா ரொம்ப வீரியமா செயல் படனும் ஏன்னா பெண்கள் மீது பாலியல் சுரண்டல் போன்றதை தடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி வந்த விமர்சனம் என்னன்னா அவள் ஒழுங்கா ஆடை அணியவில்லை என்கிறார்கள் குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாங்க குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கா, இல்லை அதன் நடத்தை காரணமாக இருக்கா. பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணம் என்று சொல்றது ரொம்ப இயல்பா ஏற்றுக்கொள்ளும் வடிவமாகிவிட்டது. 

இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்தை உடைக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும் அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும். நமக்கு வர பிரச்சனைய இன்னொருத்தர்கிட்ட சொல்றதே முட்டால் தனம், உனக்கு பசிச்சா நீ தான் சாப்பிடனும். பிரச்சனைகளை தீர்க்கும் சங்கமாக இது இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!