அஜித்தால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்...! 

 
Published : May 02, 2018, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
அஜித்தால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்...! 

சுருக்கம்

ajith cheeted for fans always

தல அஜித் நேற்று தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதும் பிரமாண்டமான கொண்டாட்டங்களை, விரும்பாத இவர், தன்னுடைய குடும்பத்துடன் எங்காவது வெளியூருக்கோ... அல்லது வெளிநாட்டுக்கோ சென்று விடுவது வழக்கம்.

ஆனால் அஜித் ரசிகர்களோ... அதனை பெரிது படுத்துவதே இல்லை. எப்போதும் போல் அஜித்தை பார்க்க முடியாது என்பது தெரிந்தும் அவருடைய வீட்டின் முன்பு குவிந்து, ஆட்டம், பாட்டம், பட்டாசு என அசத்தி விடுவார்கள். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அஜித் வீட்டின் முன்பு குவியும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மிஞ்சுவது என்னமோ ஏமாற்றம் தான்.

இந்த வருடமும் திருவான்மியூரில் அஜித் ரசிகர்கள் நள்ளிரவே கூடி, தல அஜித் வாழ்க என கோஷம் போட்டு, வீட்டின் முன்னாள் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டானர். 

500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு திரண்டதால், போலீசார் குவிக்கப்பட்டு ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் முனைப்புக்காட்னர், அஜித்தை தான் பார்க்க முடிய வில்லை ஆனால் அவருடைய வீட்டையாவது பார்க்கலாம் என வெளியூர்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் சோகமாக அங்கிருந்து புறப்பட்டனர். 

ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் இப்படி அவருடைய பிறந்தநாளை கொண்டாட, மற்றொரு புறமோ... தலக்கு, ட்விட்டர், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தது. மேலும் அஜித் நல்ல ஆரோக்கியதுன்டனும் உடல் நலமுடனும் வாழ ராகவேந்திரா சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

ரசிகர்கள் மட்டும் இன்றி, அஜித்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!