பெண்ணுக்கு பாமக ட்ரெஸ் போட்டு அசிங்கப்படுத்தினாரா பா.ரஞ்சித்..? 6 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் சர்ச்சை..!

By Thiraviaraj RMFirst Published Jan 6, 2020, 12:37 PM IST
Highlights

இயக்குநர் பா.ரஞ்சித் 2014ல் இயக்கிய மெட்ராஸ் படத்தில் பெண்ணுக்கு பாமக கட்சி நிறத்தில் பார்டர் போட்ட சுடிதாரை அணிய வைத்து அசிங்கப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

சாதீய குறியிடுகளை தனது படத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். அவர் இயக்கிய முதல் படமான அட்டைக்கத்தி படம் முதல் சாதியக் குறியீட்டை புகுத்தி வருகிறார். அந்தப்படத்தில் ‘உயர்சாதி பெண்களை காதலித்தால் மட்டும் போதாது. அனுபவிச்சிடணும். அப்ப தான் நம்மள விட்டு போக மாட்டாளுக’ என ஹீரோவுக்கு துணை நடிகர் ஒருவர் ஐடியா கொடுப்பதாக காட்சி அமைத்திருந்தார். 

அடுத்து மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீ பிடித்த பாடலில் பெண்ணின் உடையில் பாட்டாளி மக்கள் கட்சி வண்ணம் உள்ள ஆடை அணிந்து வருவது போல் காட்சியமைத்து  இருந்தார்.  அதாவது இந்தக் காட்சி மூலம் வன்னியர் இனத்து பெண்ணுடன் காதல் கொள்ளும் வகையில் அந்த ஆடை உணர்த்துகிறது. இந்த விவகாரம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

யாரோ ஒருவர் சமூகவலைதளத்தில் அந்த காட்சியில் இடம்பெற்ற புகைப்படத்தில் பதிவு செய்ய அதனை கண்டித்து பலரும் பா.ரஞ்சித்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

click me!