
இளமையும் துடிப்பும் நிறைந்த இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் 75 வது நாள் விழாவை கொண்டாடினர் படக்குழுவினர் அப்போது பேசிய கார்த்திக் நரேன் கூகுள் பார்த்துதான் சினிமாவே கற்றுக் கொண்டேன் என்றார்.
வயதில் சிறியவராக இருந்தாலும் யாரிடமும் உதவியாளராக சேராமல் தானாகவே முன்னேறி வந்தவர். இவர் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்திற்காக , இவருக்கு சிறந்த கதைக்கான விருது கிடைக்கப்பெற்றது.
அதன் பின்னர் தற்போது, இவர் நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார். கௌதம் வாசுதேவ்மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்திப் கில்சன் , இந்திரஜித், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கார்த்திக் நரேன் தனது 3வது படம் குறித்த அறிவிப்பை தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 3வது படத்திற்கு கையெழுத்திட்டுள்ளேன். இந்த கதை இதயத்திற்கு நெருக்கமான கதை என்றும், படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.