திரையரங்கில் மதுபானம்: ஐடியா கொடுத்து கருத்து கேட்ட இளம் இயக்குனர்! ரசிகர்களின் அதிரடி பதில்!

By manimegalai aFirst Published May 17, 2020, 2:54 PM IST
Highlights

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் நாளுக்கு நாள் எகிறி கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மீண்டும் மது கடைகளை திறந்ததற்கு, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மக்களும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
 

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் நாளுக்கு நாள் எகிறி கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மீண்டும் மது கடைகளை திறந்ததற்கு, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மக்களும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் ஒருவர் திரையரங்குகளில் உரிய லைசன்ஸ் பெற்று, வெளிநாடுகளை போல், இந்தியாவிலும் பீர், பிரீசர், வைன் போன்றவை ஏன் விற்பனை செய்யக்கூடாது என்பது குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் மிகவும் மோசமான யோசனை என அதிரடியாக தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'மகாநடி' படத்தின் இயக்குனர் தான் இந்த ஐடியாவை கொடுத்துள்ளார். 

இதற்கு பலர், அவவ்போது குடும்பத்தோடு வந்து செல்லும் இடங்களில் ஒன்றான... தியேட்டர்களில் இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவந்தால், குடும்பமாக படம் பார்க்க வருபவர்கள் கூட வரமாட்டார்கள் என கூறி வருகிறார்கள். இதற்கு நாக் அஷ்வின் தான் அணைத்து திரையரங்குகளை சொல்லவில்லை என்றும், குறிப்பிட்ட சில மால்களில் மட்டும் இது போன்ற திட்டத்தை கொண்டுவரலாம் என கூறியுள்ளதற்கும் கண்டனங்கள் எகிறி வருகிறது.

மேலும் இவர் கூறியுள்ளதற்கு பலரும் மிகவும் மோசமான யோசனை என்றே கூறி வருகிறார்கள். இதில் இருந்து, ரசிகர்கள் அவர்கள் குடும்பத்துடன் வந்து படம் பார்க்கும் இடங்களில் குடி என்பது அறவே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அதே நேரத்தில் தற்போது ஊரடங்கு ஓய்வு, 4 ஆம் கட்டமாக  நீட்டிக்கப்படும் என கூறியுள்ளதால், தற்போதைக்கு... திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அப்படியே, சமூக விலகல் உள்ளிட்ட ஒழுங்கு முறைகளை கடைபிடித்து திறக்கப்பட்டாலும், கொரோனா பீதியால் முன்பு போல் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு படை எடுப்பார்களா என்றால் சந்தேகமே...?

இயக்குனர் நாக் அஷ்வின் போட்டுள்ள ட்விட் இதோ...


 

Once In a talk with suresh babu garu and rana, it came up what if theaters get license to serve beer/breezer/wine, like in other countries..could it increase footfalls...could it save the theater business (which does need saving)...wat do you think? Good idea, bad idea?

— Nag Ashwin (@nagashwin7)

 

Bad idea
Then Families won't come to theaters

— ʀᴀᴠɪ ᴛᴇᴊᴀ (@RaviTejaK_007)

Very bad idea family audiences won't come

— Ntr ante pranam. (@lovetarak9999)

click me!