ராமர் வேடத்தில் பிரபாஸ்... சீக்ரெட்டை உடைத்த இயக்குநர் மீது செம்ம கடுப்பில் “ஆதிபுருஷ்” படக்குழு...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 18, 2020, 8:40 PM IST
Highlights

இதனால் ஆதிபுருஷ் படக்குழுவினர் பிரபாஸின் 21வது படத்தை இயக்க உள்ள நாக் அஸ்வின் மீது கடுப்பில் உள்ளார்களாம். 

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய அடுத்த படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது இன்னும் பெயரிடப்படாத பிரபாஸின் 21வது படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார்.  இந்த படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பே ரசிகர்கள் நெஞ்சைவிட்டு நீங்காத நிலையில், பிரபாஸின் 22வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று இரவு பிரபாஸ் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் உடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்ட பிரபாஸ், இன்று காலை 7 மணி 11 நிமிடத்திற்கு அசத்தல் அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தார். 

அதன் படி சரியாக சொன்ன நேரத்திற்கு பிரபாஸ் தனது 22வது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த படத்திற்கு ஆதிபுருஷ் என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. விசேசமாக வடிவமைக்கப்பட்ட இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என பிரபாஸ் கூறியிருந்தார். 

ஆனால் படக்குழு சீக்ரெட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக படம் ராமாயண கதையை தழுவியது என்பதை கூறாமல் இருந்தனர். ஆனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற சில ஓவியங்கள் அதை உறுதி செய்தது. இந்நிலையில் பிரபாஸின் 21வது படத்தை இயக்கும் நாக் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்டால் படத்தின் மொத்த சுவாரஸ்யமும் குலைந்துவிட்டது. அதாவது அவர் பிரபாஸிக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ள ட்வீட்டில், ராமர் வேடத்தில் பிரபாஸை காண மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆதிபுருஷ் படக்குழுவினர் பிரபாஸின் 21வது படத்தை இயக்க உள்ள நாக் அஸ்வின் மீது கடுப்பில் உள்ளார்களாம். 

click me!