
அஞ்சாதே
அஞ்சாதே படத்தின் கதை எப்படி உருவானது என்பது பற்றி இயக்குநர் மிஷ்கின் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மிஷ்கின் இயக்கத்தில் 2008-ல் வெளியான 'அஞ்சாதே' ஒரு அதிரடித் திரில்லர் படம். இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய படைப்புகளுல் ஒன்றாக கருதப்படுகிறது. இப்படம் உருவானது குறித்து அவர், இப்பதான் நான் முழுமையாக படமெடுக்க கற்றுக்கொண்டவன் எனஉணர்வதாக கூறியுள்ளார். மேலும் இது நீண்ட நேரம் இருந்தாலும் சரியான கோணத்தில் சொல்லப்பட்ட கதை என்றும் கூறினார்.
கருப்பு கார் மற்றும் வெள்ளை கார்:
நாசர் கருப்பு கார்ல வந்தா பின்னாடியே ஒரு வெள்ளைக்காரன் வந்துச்சு. நாசர் என்னோட கதை என்னன்னு கேட்டாரு உடனே நான் சொன்னேன் இரண்டு நண்பர்கள் ஒருத்தன் நல்லாவே இன்னொருத்தன் கெட்டவன். கார வைத்து தான் நான் உருவாக்கின படம் அஞ்சாதே அடுத்த 40 நாளுக்குள்ள நான் அந்த படத்தை எழுதி முடிச்சிட்டேன் என்று அஞ்சாதே படத்தை உருவாக்குன கதையை கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
அதே போன்று இந்த படத்திற்காகவும் மிஷ்கின் பல யுக்திகளை கையாண்டிருக்கிறார். அதில், இந்தப் படத்தில் பிரசன்னா மற்றும் நரேன் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் அவர்கள் கால்கள் வைத்தே பல கதைகளை சொல்லியிருக்கிறார். மேலும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நரேனை இந்தப் படத்தின் வில்லனாக காட்டியிருப்பார். இந்த ரோலுக்காக அவரை பல நாட்கள் குளிக்காமல் இருக்க சொல்லியிருக்கிறார். மேலும், வில்லனுக்கான ரோலுக்காக அவரது கண்களில் அந்த கொடூரம் தெரிய வேண்டும் என்பதற்காக அவரை ஒரு இருட்டு அறையில் இருக்க வைத்திருக்கிறார். இதன் விளைவு தான் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 10 வில்லன்களில் ஒருவராக பிரசன்னாவின் தயா கதாபாத்திரம் பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.