
“சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “நந்தலாலா”, “யுத்தம் செய்”, “முகமூடி”, “பிசாசு”, “துப்பறிவாளன்”, “சைக்கோ” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மிஷ்கின். சமீபத்தில் உதயநிதி கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞராக நடித்த “சைக்கோ” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தது. இதனையடுத்து துப்பறிவாளன் 2 ஷூட்டிங் பணிகளை இயக்குநர் மிஷ்கின் வேகப்படுத்தினார்.
லண்டனில் விஷால், பிரசன்னா ஆகியோருடன் “துப்பறிவாளன் 2” பட ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷால் - மிஷ்கின் இடையே மோதல் வெடித்தது. திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்ததாக இயக்குநர் மிஷ்கின் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து விஷால் தன்னையும், தனது குடும்பத்தையும் பற்றி கேவலமாக பேசியதாகவும், துப்பறிவாளன் படத்திற்கான சம்பளத்தை தர மறுத்ததாகவும் மிஷ்கின் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து விஷால் வாய்பிளக்கும் அளவிற்கு தரமான படமொன்றை எடுக்க முடிவு செய்த மிஷ்கின் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார். “அஞ்சாதே” படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க உள்ளதாகவும், படத்தின் கதையை கேட்டு சிம்பு ஓ.கே. சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சிம்பு 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு மிஷ்கினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!
தன்னை போல் சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் மற்றொரு நடிகரான அருண் விஜய்யை ஒப்பந்தம் செய்துள்ளாராம் மிஷ்கின். தீவிர வில்லன் வேட்டையில் இறங்கி இருக்கும் மிஷ்கின், லாக்டவுன் முடிந்தவுடன் “அஞ்சாதே 2” படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.