வெற்றிமாறனின் ‘அசுரன்’படத்தில் திடீரென உள்ளே புகுந்த இயக்குநர் மாரி செல்வராஜ்...

By Muthurama LingamFirst Published Sep 23, 2019, 10:49 AM IST
Highlights

இந்தப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாக நெல்ல மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்குவதற்கு முன்பே தனுஷ் கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படத்துக்காக லண்டன் சென்றுவிட்டார்.இதனால் ’அசுரன்’ படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின் டப்பிங்கை அங்கேயே முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.
 

தற்போதைய தமிழ்சினிமாவில் இயக்குநர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அண்டர்ஸ்டேண்டிங் மிகவும் ஆச்சர்யகரமானது. தங்களது படங்களில் மற்ற இயக்குனர்களுக்கு நடிக்க வாய்ப்புத்தருவது, ஈகோ பார்க்காமல் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை மற்ற இயக்குநர் கைகளில் ஒப்படைப்பது போன்றவை இங்கே இப்போது சர்வசாதாரணம். அந்த வகையில் வெற்றிமாறனின் ‘அசுரன்’படத்தில் ‘பரியேறும் பெருமாள்’இயக்குநர் மார்செல்வராஜ் பணியாற்றவிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாக நெல்ல மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்குவதற்கு முன்பே தனுஷ் கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படத்துக்காக லண்டன் சென்றுவிட்டார்.இதனால் ’அசுரன்’ படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின் டப்பிங்கை அங்கேயே முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்காகத்தான் இயக்குநர் மாரிசெல்வராஜ் இலண்டன் செல்கிறார். இப்படத்தின் கதை தென்மாவட்டங்களில் நடப்பதால் கதாபாத்திரங்கள் அம்மாவட்ட வட்டார வழக்கு மொழியில் பேசவேண்டும்.வெற்றிமாறனுக்கு அதில் பரிச்சயம் இல்லை என்பதால் அம்மொழியை நன்கறிந்த மாரிசெல்வராஜை வைத்து தான் படத்தின் மொத்த குரல்பதிவையும் செய்திருக்கிறார்களாம். அதன் தொடர்ச்சியாக தனுஷுக்கும் வட்டாரவழக்குச் சொற்களை அறிமுகப்படுத்தி அவற்றை உச்சரிக்கும் முறையையும் சொல்லிக்கொடுக்கவே மாரிசெல்வராஜ் செல்கிறாராம்.

click me!