சோஷியல் மீடியாவில் விஷத்தைக் கக்குறாங்க... விஜய் - அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் மணிரத்னம்!

By SG Balan  |  First Published Nov 20, 2023, 12:20 AM IST

மணிரத்னம், "விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை போடுவதும், பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களுக்காக அடித்துக் கொள்வதும் சரியா?" என்று கேட்டார்.


விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை பற்றி போல்டான கருத்தைக் கூறியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். பிரபல யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் அதில் கலந்துகொண்டனர்.

அப்போது, சமூக வலைத்தளங்களில் நடைபெறும் காரசார சண்டைகள் பற்றியும் அதனால் பரவும் வெறுப்பு பேச்சு பற்றியும் இயக்குநர்கள் விவாதம் செய்தனர். அப்போது பேசிய மணிரத்னம், "விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை போடுவதும், பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களுக்காக அடித்துக் கொள்வதும் சரியா?" என்று கேட்டார்.

Tap to resize

Latest Videos

சமூக வலைத்தளங்களில் இப்படி சண்டை போடுபவர்கள் விஷத்தை மட்டும்தான் கக்குகிறார்கள். இளைஞர்கள் சமூக வலைதளங்களை ஆள்பவர்களுக்கு எதிராக கேள்வி கேட்க பயன்படுத்தினால் நல்லது நடக்கும். அதை விட்டுவிட்டு நடிகர்களுக்காக சண்டை போடும் இடமாக சமூக வலைத்தளங்களை மாற்றிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வரும் கியாவின் புதிய கார்! வெற லெவல் வசதிகளுடன் கார்னிவல் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

தொடர்ந்து பேசிய அவர், "தெருவில் இறங்கி சண்டை போடுற மாதிரி கேவலமா சண்டை போட்டுக்கொள்வது  தேவையில்லாத ஆணி" என்று வடிவேலு ஸ்டைலில் கூறி அசத்தினார். அஜித் பிடிக்கும், விஜய் பிடிக்கும் என்று படு மோசமாக கெட்ட வார்த்தைகளைக் கூறி சண்டை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.

சில நடிகர்கள் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொள்ளத் தூண்டுகின்றனர்; படங்களிலும் இணைந்து நடித்து வந்தால் இந்த பிரச்சனை வராது. இயக்குநர்கள் தங்கள் படங்களில் அடிதடி காட்சிகளை வைத்து சமூகத்தில் இளைஞர்கள் மீது விஷத்தை விதைக்கின்றனர். அவர்கள் இதைப் புரிந்து செயல்பட்டால் ரசிகர்களும் தானே மாறிவிடுவார்கள் என்று சில நெட்டிசன்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

முதல்வர் கனவில் அண்ணாமலை... தண்ணி தெளிச்சு விடுங்க... பங்கமாகக் கலாய்த்த எஸ்.வி.சேகர்

click me!