ஏமாற வேண்டாம்... ரசிகர்களுக்காக 'மாஸ்டர்' பட இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Published : Apr 07, 2020, 12:43 PM IST
ஏமாற வேண்டாம்... ரசிகர்களுக்காக 'மாஸ்டர்' பட இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சுருக்கம்

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை படமாக எடுத்து, அணைத்து ரசிகர்களளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்:

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை படமாக எடுத்து, அணைத்து ரசிகர்களளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இதை தொடர்ந்து கடந்த வருடம், இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம் இவரை முன்னணி இயக்குனர் நிலைக்கு உயர்த்தியது. 

மாஸ்டர்:

'கைதி' படத்தின் வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தாமதமான ரிலீஸ்:

இந்நிலையில், இப்படம் ஏப்ரில் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தின் ரிலீஸ் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்:

கொரோனா ஒருபுறம் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில், 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு வந்தனர்.

ஏமாற வேண்டாம்:

விஜய் ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் போலி கணக்குகள் துவங்கி, அதில் சிலர் லோகேஷ் கனகராஜ் போலவே அப்டேட் தெரிவித்தனர். இந்த தகவல் தெரியவர, லோகேஷ் கனகராஜுக்கு தெரியவர, ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம், என்றும்... தான் இன்ஸ்டாகிராம், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளத்தில் இல்லை. ட்விட்டரில் மட்டுமே உள்ளேன் என பதில் கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள இந்த படத்தில், நடிகை  மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மிரட்டல் வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை