நெஞ்சு வலியால்... தனியாக காரில் போய் அட்மிட் ஆன கே.வி.ஆனந்த்! விவேக்கை தொடர்ந்து நெஞ்சை உலுக்கிய அடுத்த மரணம்!

Published : Apr 30, 2021, 09:26 AM IST
நெஞ்சு வலியால்... தனியாக காரில் போய் அட்மிட் ஆன கே.வி.ஆனந்த்! விவேக்கை தொடர்ந்து நெஞ்சை உலுக்கிய அடுத்த மரணம்!

சுருக்கம்

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.  

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின் இயக்குனராக அவதாரம் எடுத்தவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக தமிழில் இயக்கினார்அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து அடுத்தடுத்து வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை இயக்கினார்.

கொரோனாவோ வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் யாரையும் தொந்தரவு செய்யாமல் காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!