
சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது இயக்குனர் களஞ்சியம்தான். தற்போது அவர் முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
களஞ்சியம்
பூமணி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகவானவர் களஞ்சியம். இந்த படத்தில் முரளி மற்றும் தேவயானி நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்காக சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதை வென்றார்.
அஞ்சலி
பின்னர் கருங்காலி என்ற படத்தில் அஞ்சலியுடன் ஜோடி போட்டார். சிறிது நாட்களிலேயே நடிகை அஞ்சலி இயக்குனர் களஞ்சியம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதன்பின் ஒருமுறை படப்பிடிப்பின் போது சக நடிகையை ஓங்கி அறைந்தார். இப்படி பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
அஜித்
இந்நிலையில் இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டியில் மானம் வெட்கம் உள்ள தமிழன் அஜித்துக்கு பேனர் வைப்பானா என்று பேசியிருக்கிறார்.
ஆர்யா
அதோடு ரஜினி, அர்ஜுன் , பிரபுதேவா, பாபி சிம்ஹா எல்லோரும் தமிழர்களா ஒரு படத்தில் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஆர்யா தனக்கு தமிழ் எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது என்று கூறுகிறார்.
பிரகாஷ்ராஜை அடித்தோமா
அதோடு கன்னடத்தில் போய் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவை அவனே அழ வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் வந்து தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என்று பேசுகிறார். அவரை நாம் அடித்து விரட்டினோமா
இனவெறியை பாராட்டுகிறேன்
கர்நாடகாவில் எம்.ஜி.ஆரின் பதாகை வைக்கப்பட்டது. அவர் கன்னடரா பின்னர் ஏன் அவரின் பதாகை இங்கே என்று கூறி அதை கிழித்து எறிந்தனர். அவர்களின் இன வெறியை பாராட்டுகிறேன் என்று பேசினார்.
முன்னணி நடிகர்களை இப்படி பேசியதால் கோலிவுட்டே பரபரப்பாக உள்ளது. மேலும் அஜித் ரசிகர்கள் இயக்குநர் களஞ்சியம் மீது கோபத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.