ரஜினி கமலுக்கு டஃப் கொடுக்கும் விஷால்...! உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அரசியல் கட்சி பற்றி ஆலோசனையாம்..!

 
Published : Feb 04, 2018, 07:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
 ரஜினி கமலுக்கு டஃப் கொடுக்கும் விஷால்...! உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அரசியல் கட்சி பற்றி ஆலோசனையாம்..!

சுருக்கம்

actor vishal political news

திரையுகை சேர்ந்த பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லை என்றாலும் விஷால் மனதில் உள்ள அரசியல் ஆசை வெளிப்பட்டது அனைவருக்குமே மிக பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

காரணம்... கோலிவுட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், மற்றும் கமலஹாசன் இருவருமே பல வருடங்களாக அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த போது முடிவெடுக்க முடியாமல் பல வருடம் காலம் தாழ்த்தி தற்போது தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் ஆசை பற்றி எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்து திடீர் என ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார் விஷால் என்பது அனைவரும் அறிந்தது தான்.

நிராகரிக்கப்பட்ட மனு:

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

விஷால் முடிவு:

அரசியலில் முழுமையாக ஈடுபடும் முடிவில் இருக்கும் விஷால், உள்ளாச்சி தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் விஷால்:

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவர், மற்றும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் என இரண்டு பதவிகளை வகித்து வரும் விஷால் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கட்சி தொடங்குவது குறித்து உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆலோசிக்கப்படும்  என்றும் உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்