ட்ராப்பான கமலுடனான ப்ராஜெக்ட்.. அதனால் என்ன? யோகி பாபுவிற்கு முன் அசுர நடிகரோடு இணைகிறார் டைரக்டர் H. வினோத்!

Ansgar R |  
Published : Jan 25, 2024, 05:09 PM ISTUpdated : Jan 25, 2024, 05:11 PM IST
ட்ராப்பான கமலுடனான ப்ராஜெக்ட்.. அதனால் என்ன? யோகி பாபுவிற்கு முன் அசுர நடிகரோடு இணைகிறார் டைரக்டர் H. வினோத்!

சுருக்கம்

Director H Vinoth : தனது நேர்த்தியாக கதைக்களத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஒரு இயக்குனர் தான் H. வினோத். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குனர் பார்த்திபன் மற்றும் விஜய் மிலிட்டன் ஆகியோரோடு பணிபுரிந்து அதன் பிறகு தமிழ் திரை உலகில் இயக்குனராக தன்னை தானே உயர்த்திக்கொண்ட இயக்குனர் தான் H. வினோத். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "சதுரங்க வேட்டை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கினார். 

அவரது முதல் திரைப்படமே அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான "தீரன் அதிகாரம் ஒன்று" என்கின்ற திரைப்படம், இவருக்கு இந்திய அளவில் மிகப் பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

திருமணத்திற்கு தயாராகிறாரா தமன்னா..! குடும்பத்தோடு.. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்!

அதன் பிறகு தொடர்ச்சியாக தல அஜித் குமாரை வைத்து அவர் இயக்கி வெளியிட்ட "நேர்கொண்ட பார்வை", "வலிமை" மற்றும் "துணிவு" ஆகிய மூன்று திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளும் மற்ற பணிகளும் தொடர்ந்து நடந்து வந்தது.

அந்த நிலையில் தற்போது கமலுடன் அவர் இணைந்த அந்த ப்ராஜெக்ட் முற்றிலும் டிராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இருப்பினும் பிரபல நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற உள்ள ஹெச். வினோத் அதற்கு முன்னதாக ஒரு மாஸ் ஹீரோவோடு இணையுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது. 

பிரபல செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இந்த திரைப்படம் உருவாகும் என்றும், நடிகர் தனுஷ் அவர்கள் இந்த திரைப்படத்தில் நாயகனாக இணை உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது 51வது பட பணிகளை முடித்த பிறகு வினோத், தனுஷ் இணைவார் என்றும் கூறப்படுகிறது. 

அயலான் 2 உறுதி.. ஆனா அதுக்கு முன்னாடி இன்னொரு படம் இருக்கு - மாஸ் ஹீரோவை வைத்து பிளான் போட்ட இரா. ரவிக்குமார்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!