இயக்குநர் பார்த்திபனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்...

By Muthurama LingamFirst Published Oct 11, 2019, 4:58 PM IST
Highlights

சேரன் பிக்பாஸ் இல்லத்துக்குள் இருந்தபோது அவர் குறித்து பல நல்ல கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டபோது இயக்குநர் பார்த்திபன்,...சேரன் மற்றவர்களை அவமானப்படுத்துவதில் வல்லவர். ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் அவர் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
 
ஐந்து வருடங்களுக்கு முன்பு ‘குப்பைப்படம் எடுப்பவர்’என்று இயக்குநர் பார்த்திபன் குறித்து தான் ஒரு மேடையில் பேசிய கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் பிக்பாஸ் பிரபலம் சேரன்.

சேரன் பிக்பாஸ் இல்லத்துக்குள் இருந்தபோது அவர் குறித்து பல நல்ல கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டபோது இயக்குநர் பார்த்திபன்,...சேரன் மற்றவர்களை அவமானப்படுத்துவதில் வல்லவர். ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் அவர் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.

பார்த்திபனிடம் தன்னைப்பற்றி இருந்த அந்த கசப்பை மறக்கடிப்பதற்காக பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்தவுடன் ‘ஒத்தச்செருப்பு’படம் பார்த்து அவரைப்பாராட்டிய சேரன் தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் பார்த்திபனிடம் மன்னிப்புக் கோரினார். அந்த பதிவுகளில்,...ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்.. எந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்..என்றும்,....அந்த திரைப்படம் உங்கள் பாணியில் இருப்பதாக குறிப்பிட நினைத்தேனே தவிர குப்பைப்படம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்க மாட்டேன்.. தவறி வந்திருந்தால் மன்னிக்கவும். புதியபாதை, ஹவுஸ்புல், க.தி.வ.டை, குடைக்குள் மழை, ஒத்த செருப்பு எல்லாம்பார்த்து என்னைமறந்து பேசியிருக்கிறேன்.. உங்களிடம் என்று சமாதான தூது விட்டிருக்கிறார்.

ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்..
எந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்..

— Cheran (@directorcheran)

click me!