’இனி டைரக்‌ஷன் செட் ஆகாது’...யுடியூப் சானலில் இறங்கும் உங்கள் பரிதாபத்துக்குரிய பாரதிராஜா...

By Muthurama LingamFirst Published Oct 2, 2019, 4:34 PM IST
Highlights

ஆனால் ‘93ல் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’படத்துக்குப் பின்னர் பாரதிராஜாவின் கொடி இறங்கியது.  அடுத்து அவர் இயக்கிய ‘பசும்பொன்’,’அந்தி மந்தாரை’’கடல் பூக்கள்’,’கண்களால் கைது செய்’ என்று எந்தப்படங்களும் ஓடவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய் அவரது மகன் மனோஜை கதாநாயகனாக்கி இயக்கிய ‘தாஜ்மஹால்’, ‘ஈர நிலம்’படங்கள் அவர் பெயரை பெருமளவு கெடுத்தன. அடுத்து நடிகராகக் களம் இறங்கி ஓரளவு தாக்குப் பிடித்து வருகிறார்.
 

‘16 வயதினிலே’என்கிற காவியம் தொடங்கி ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’என்ற கண்றாவி வரை சுமார் 45 படங்களை இயக்கியிருக்கும் பாரதிராஜா இன்னும் ஒரு வாரத்தில் ‘என் இனிய தமிழ் மக்களே’என்கிற பெயரில் யுடுயூப் சானலில் நிகழ்ச்சிகள் வழங்கவிருக்கிறார்.

‘77ல் ‘16 வயதினிலே’ மூலம் தமிழ் சினிமாவில் புரட்சியே செய்த பாரதிராஜா தொடர்ந்து பல ஹிட்டுகள் கொடுத்து தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குநர்களில் ஒருவராக இன்றுவரை மதிக்கப்படுகிறார். ஆனால் ‘93ல் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’படத்துக்குப் பின்னர் பாரதிராஜாவின் கொடி இறங்கியது.  அடுத்து அவர் இயக்கிய ‘பசும்பொன்’,’அந்தி மந்தாரை’’கடல் பூக்கள்’,’கண்களால் கைது செய்’ என்று எந்தப்படங்களும் ஓடவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய் அவரது மகன் மனோஜை கதாநாயகனாக்கி இயக்கிய ‘தாஜ்மஹால்’, ‘ஈர நிலம்’படங்கள் அவர் பெயரை பெருமளவு கெடுத்தன. அடுத்து நடிகராகக் களம் இறங்கி ஓரளவு தாக்குப் பிடித்து வருகிறார்.

இந்நிலையில் இனி படம் இயக்கும் வேலைகள் எதுவும் எடுபடாது என்று முடிவெடித்திருக்கும் அவர் வரும் விஜயதசமியன்று அதாவது அக்டோபர்8ம் தேதி முதல் ‘என் இனிய தமிழ் மக்களே’என்ற பெயரில் யுடியூப் சேனல் ஒன்றைத் துவங்க முடிவெடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்த காலம் தொடங்கி நடப்பு சம்பவங்கள் வரை அனைத்தையும் கலந்துகட்டி சுவாரசியமாக வழங்கவிருக்கிறாராம்.

click me!