நூறு பிணங்களின் எலும்புகளை மாலையாக்கி அணிந்திருக்கும் இயக்குநர் பாலா: துரத்தும் துயரங்கள், மிரட்டும் சாபங்கள்.

By Vishnu PriyaFirst Published Dec 11, 2019, 6:24 PM IST
Highlights

கறுப்பு வெள்ளை காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவுக்கு ஒரு சென்டிமென்ட்  உள்ளது. அது படம் துவங்கியதும் ‘எல்லாரும் நல்லா இருக்கணும்!  ரொம்ப சந்தோஷம்!’ இப்படி ஏதாவது மகிழ்ச்சியான வார்த்தைகளை சொல்வது! அல்லது விநாயகர் கோயிலில் விடலை போடுவது! போன்று மங்களகரமான விஷயங்களைக் காண்பிப்பார்கள்.
 

கறுப்பு வெள்ளை காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவுக்கு ஒரு சென்டிமென்ட்  உள்ளது. அது படம் துவங்கியதும் ‘எல்லாரும் நல்லா இருக்கணும்!  ரொம்ப சந்தோஷம்!’ இப்படி ஏதாவது மகிழ்ச்சியான வார்த்தைகளை சொல்வது! அல்லது விநாயகர் கோயிலில் விடலை போடுவது! போன்று மங்களகரமான விஷயங்களைக் காண்பிப்பார்கள்.
 
ஆனால் அதை உடைத்த வெகு சில இயக்குநர்களில் மிக முக்கியமானவர் பாலா. சுடுகாடு, பிணம், அகோரிகள், ரத்தம் என்று எதிர்மறையான விஷயங்களை, அபசகுனங்களை, ஆட்தின்னிகளையெல்லாம் படத்தின் துவக்கத்தில் காட்டி பெரும் பதற்றத்தை பற்ற வைப்பார்.  

ஆனாலும் பாலா படமென்றால் பெரும் ரசிகப் பட்டாளம் உண்டு. முதல் நாள் முதல் ஷோவில் போய் விழுவார்கள். 

அப்பேர்ப்பட்ட பாலாவுக்கே பேய் பயத்தை காட்டிய படமென்றால் ‘வர்மா’ தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’யைதான் தமிழில் பாலா இயக்கத்தில், விக்ரமின் மகன் நடிக்க, ‘வர்மா’வாக்கினார்கள். ஆனால் படம் முடிந்ததும், போட்டுப் பார்த்த தயாரிப்பு தரப்போ ’இதை வெளியிட முடியாது. வெளியிட்டா ஓடாது. மூல படத்தை கெடுத்து வெச்சிருக்கார்.’ என்று பாலாவின் படத்தை முடக்கினர். 

இந்திய சினிமாவின் மிக முக்கிய ஆளுமையான பாலவுக்கு கிடைத்த மிகப்பெரிய தலைகுனிவு இது. விக்ரமாவது பாலாவுக்கு இதில் தோள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரும் அதை செய்யவில்லை. அதே படம் ‘ஆதித்ய வர்மா’ எனும் பெயரில் மீண்டும் தமிழில் புது இயக்குநரை வைத்து எடுக்கப்பட்டது. விக்ரம் தன் பணத்தையும் போட்டு  ஷூட்டை துவக்கினர். 

இந்த நிலையில், தன் படத்தை முடக்கி, அசிங்கப்படுத்தியதால் மனம் நொந்து,  தானும்முடங்கினார் பாலா. அடுத்து படங்கள் எதுவும் கமிட் ஆகாமல், காசிக்கு விசிட் அடித்து, ‘நான்கடவு’ பட ஷூட்டின் போதுகிடைத்த அகோரி நண்பர்களுடன் ஐக்கியமானார். மிக சென்சிடீவாக தன்னை ரிலாக்ஸ் செய்து கொண்டார். 

இந்த சமயத்தில் அகோரி ஒருவர், பாலாவுக்கு ஒரு எலும்பு மாலையை பரிசாக தந்து, அவரது கழுத்தில் மாட்டிவிட்டார். அது நூறு பிணங்களின் முதுகெலும்பில் உள்ள சிறு எலும்புகளால் உருவான மாலை. அதை போட்டுக் கொண்ட பின் பாலாவின் நடவடிக்கையிலேயே ஒரு வித்தியாசம் தெரிகிறது என்கிறார்கள். 

சினிமா மற்றும் பர்ஷனல் வாழ்க்கையில் சிலர் தனக்கு பெரும் துரோகம் செய்துவிட்டதாக சொல்லி கடுமையாக வருந்துகிறார் பாலா. முன்பெல்லாம் தன் எதிரிகளை மன்னித்தும், மறந்தும் வந்தவர் இப்போதெல்லாம்  அவர்களுக்கு சாபம் விட துவங்கியுள்ளார். 

ஆதித்ய வர்மா படத்துக்கு பெரும் சாபம் விட்டாராம் பாலா! விளைவு, படம் மரண மாஸ் அடி. பாலாவால் கைதூக்கி விடப்பட்ட விக்ரமே நன்றியை மறந்ததால் அவருக்கு இப்படத்தின் தோல்வி மூலமாக எட்டு கோடி நஷ்டமாம். கடும் மன வேதனையில் இருக்கிறாராம் விக்ரம். 
பாலா கழுத்து எலும்பு மாலையில் பவரை கேள்விப்பட்ட கோடம்பாக்க புள்ளிகள் மிரள்கின்றனர். 

click me!