
நடிகர் தியாகராஜ பாகவதரை வைத்து இயக்கி சிவகாமி என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர்,ஆண்டனி மித்திரதாஸ் தனது 103 வது பிறந்த நாளை தற்போது தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
கடந்த வருடம் இவரது 102வது பிறந்த நாளை இயக்குனர் சங்கத்தினர் ஒன்று கூடி கொண்டாடி இவரை கௌரவித்தனர்.
இரண்டாவது உலகப்போரில் ராணுவ வீரராக பணியாற்றி பல இடங்களுக்கு சென்றுள்ளார். அந்த அனுபவத்தை கொண்டு 1941 யில் தயாளன் என்ற படத்தை இயக்கினார், பின் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் 7 படங்கள் இயக்கியுள்ளார்.
இதில் மிக பெரிய வெற்றி படமாக அமைத்து அவருக்கு பெருமை சேர்த்தது, தியாகராஜ பாகவதர் நடித்த சிவகாமி படமாகும்.
100 ஆண்டு மேல் கடந்து 103 வயதில் அடியெடுத்து வைக்கும் ஆண்டனி அவர்களுக்கு நியூஸ் பாஸ்டின், பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.