
பொதுவாகவே மற்ற படங்களை விட விஜய் நடித்து வெளியாகும் படங்கள் இப்போதெல்லாம் வெளியாகும் முன்பே பிரச்சனைகளை சந்திப்பது மட்டும் இன்றி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே பல பிரச்சனைகளை சந்திக்கிறது.
அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' படத்தில் பண மதிப்பிழப்பு, மற்றும் தேசிய கட்சி கொண்டு வந்த திட்டங்களை குறை கூறுவது போல் காட்சிகள் உள்ளது என பிரச்சனை தீயாக எரிந்தது. இதன் காரணமாக அப்படி இந்த படத்தில் என்ன தான் விஜய் பேசியுள்ளார் என திரையரங்கம் சென்று பலர் இந்த படத்தை பார்த்தனர்.
இதை தொடர்ந்து தற்போது இதே போன்ற ஒரு பிரச்சனை 'சர்கார்' திரைப்படத்திற்கும் வந்துள்ளளது. இந்த படத்தில் 'கோமளவல்லி என்ற கேரக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலவச திட்டங்களை அவதூறும் செய்யும் வகையில் காட்சிகள் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
ஒருபக்கம் திரையரங்குகளில் காட்சிகள் ரத்தானாலும், இந்த போராட்டம் படத்திற்கு நல்ல புரமோஷனாகவும் உள்ளது. அப்படி என்னதான் 'சர்கார்' படத்தில் இருக்கின்றது என்று இந்த படத்தை பார்க்க பலரை தூண்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து 'தமிழ்ப்படம் 2' இயக்குனர் சி.எஸ்.அமுதன் வித்தியாசமான டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்தில் ஆட்சியாளர்களை கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகள் இருந்தும் அதனை கண்டுகொள்ளாதவர்கள், சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருசில காட்சிகளுக்கு இவ்வளவு பெரிய போராட்டம் நடத்தி புரமோஷன் செய்து வருகின்றனர். இதேபோன்று எங்கள் படத்திற்கும் புரமோஷன் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. என்று ஆதங்கப்படும் வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
'தமிழ்ப்படம் 2' படத்தில் 'தியானம் செய்வது', 'பதவியேற்கும்போது கண்ணீர்விடுவது' உள்பட பல காட்சிகள் கிண்டலாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தும் அக்கட்சியினர்களிடம் இருந்தும் எந்தவித எதிர்ப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் அமுதன் கேப்பதும் சரிதானா என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.