அந்த இடத்தில் கை வைத்தார் என அந்த பெண் சொன்னப்போ... தாங்கமுடியல...! சேரன் மீதிருந்த மரியாதையே போச்சி...! கொதிக்கும் அமீர்...!

By vinoth kumarFirst Published Aug 23, 2019, 1:50 PM IST
Highlights

 பெண் ஒருவர்  அந்த நிகழ்ச்சியில் சேரன் என்னை இங்கே தொட்டார், அங்கே தொட்டார், என அவர் மீது குற்றம்சாட்டுவதும், அதற்கு அவர் நான் அப்படி இல்லை இப்படி இல்லை என்று வேதனையில் பொங்கி அழுதபடி என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான் இந்த நிகழ்சிக்கு வந்தேன் என்று கதறுவது  வலியை ஏற்படுத்துகிறது என்றார், இப்படியெல்லாம் அங்கு போய் அவர் சம்பாதிக்க வேண்டுமா.  என்று தலையில் அடித்துக்கொண்டார் அமீர். 

இயக்குனர் சேரன் மீதிருந்த மரியாதையே எனக்கு போய்விட்டது என இயக்குனர் அமீர் மிக காட்டமாக பேசியுள்ளார். இதெல்லாம் அவருக்கு தேவையில்லாத வேலைங்க எனவும் அவர் கடிந்துகொண்டுள்ளார்.

தொலைக்காட்சிகளில் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்து தீவிரமாக ரசித்துக்கொண்டிருந்த  தமிழக மக்கள், அது முடிந்ததும் முடியாததுமாக அப்படியே பிக்பாஸ் நிகழச்சிக்கு தாவிவிட்டனர் , அதை பார்ப்பவர்களோ, அதில் அத்தனை சுவாரஸ்யம் என்கின்றனர். அதாவது, ஒன்றாக கூடி சிரித்து பேசுவது பின்னால் போய் போட்டுத்தள்ள திட்டம் போடுவது இதுதான் அந்த நிகழ்ச்சியின் காண்செப்ட்.  எப்படிபட்டவர்களாக இருந்தாலும் அந்த வீட்டிற்குள் சென்றுவிட்டால் , அவமானப்படுவது, அசிங்கப்படுவது, உணர்ச்சிவயப்பட்டு அழுவது, என்று ஆளே தலைகீழாக மாறிவிடுவர் அதுதான் அந்த நிகழ்ச்சியில் உள்ள மார்க்கெட்டிங் யுக்தி.

அப்படித்தான் தமிழக மக்களிடம்  தனது திரைப்படங்கள் மூலம் நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்து கம்பீரமாக இருந்த இயக்குனர் சேரனை, படாதபாடு படுத்தி கதறி அழவைத்துவிட்டது பிக்பாஸ் இல்லமும் அந்த குடும்பமும். சமீபத்தில் அந்த விட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் சேரன் என்னை அந்த இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்று சொல்ல,  சேரனோ நான் அங்கு, அப்படி கைவைக்கவில்லை இப்படித்தான் வைத்தேன் என்று விளக்கம் சொல்லி ஒரு கட்டத்தில்  வேதனை தாங்கமுடியாமல் ஒ...வென கதறி அழுதேவிட்டார்... இது அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களை மத்தியில் மட்டும் அல்ல சினிமாத்துறையில் இருப்பவர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்திவிட்டது

சேரனின் இந்த நிலைமை  குறித்து ஒரு திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார், மக்களுக்கு எந்த விதத்திலும் பயணளிக்காத அந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை,  நான் மிகவும் மதிக்கும் இயக்குனர்களில் ஒருவரான சேரன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதை ஏற்க முடியவில்லை,  ஒரு காலத்தில் நான் மிக பிரமிப்புடன் பார்த்து ரசித்த  இயக்குனர்களில் அவரும் ஒருவர். அப்படிபட்ட சேரன் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களின் கேலிக்கு ஆளாவதும், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு உள்ளாவதும் மனதிற்கு வேதனையாக உள்ளது.  

பெண் ஒருவர்  அந்த நிகழ்ச்சியில் சேரன் என்னை இங்கே தொட்டார், அங்கே தொட்டார், என அவர் மீது குற்றம்சாட்டுவதும், அதற்கு அவர் நான் அப்படி இல்லை இப்படி இல்லை என்று வேதனையில் பொங்கி அழுதபடி என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான் இந்த நிகழ்சிக்கு வந்தேன் என்று கதறுவது  வலியை ஏற்படுத்துகிறது என்றார், இப்படியெல்லாம் அங்கு போய் அவர் சம்பாதிக்க வேண்டுமா.  என்று தலையில் அடித்துக்கொண்டார் அமீர்.  அப்போது அவரின் பேச்சைக்கேட்டு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி அவரின் பேச்சை வரவேற்றனர்.
 

click me!