
தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை கொடுத்து, 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடிப்பதற்காகவே எழுதப்பட்ட பல திரைக்கதைகளும் உண்டு.
திருமணத்திற்கு பின், இவருடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள், இவரை சற்று திரையுலகை விட்டு விலக வைத்து விட்டது. பின் நீண்ட இடைவெளிக்கு பின், இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. எனினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் இவர் அடுத்ததாக மூன்று தேசிய விருதுகளை வாங்கிய அந்தாதுன் என்கிற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப்படத்தின் உரிமையை நடிகர் பிரசாந்தின் அப்பா வைத்திருக்கிறார். இந்த படத்திற்காக தற்போது நடிகர் பிரசாந்த் 20 கிலோவிற்கு கிலோவிற்கு மேல் தன்னுடைய எடையை குறைத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் இந்த முயற்சியை கண்டு ரசிகர்கள் பிரமித்துள்ளனர்.
இந்த படத்தில், நடிகர் ஆயுஷ்மான் குரானா பார்வையற்ற பியானோ கலைஞராக நடித்திருப்பார். நடிகர் பிரசாந்த் ஏற்கனவே பியானோ வாசிக்கத் தெரிந்தவர் என்பதால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஏதுவாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி படத்திற்காக போராடி வரும் நடிகர் ப்ரஷாந்துக்கு, இந்த படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.