’கமலைப் பற்றி கவலை இல்லை...பிக்பாஸ் வீட்டை இடித்து நொறுக்கப்போகிறேன்’...புல்டோஷருடன் கிளம்பும் பிரபல இயக்குநர்...

Published : Aug 22, 2019, 01:32 PM ISTUpdated : Aug 22, 2019, 01:36 PM IST
’கமலைப் பற்றி கவலை இல்லை...பிக்பாஸ் வீட்டை  இடித்து நொறுக்கப்போகிறேன்’...புல்டோஷருடன் கிளம்பும் பிரபல இயக்குநர்...

சுருக்கம்

‘வர வர பிக்பாஸ் இல்லத்தில் நடக்கும் தரக்குறைவான சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது அந்த வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிவிடலாமா என்று ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இதற்காக கமல் வருத்தப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை’என்று பெரும் ஆத்திரத்தில் முழங்கியுள்ளார் இயக்குநர் அமீர்.

‘வர வர பிக்பாஸ் இல்லத்தில் நடக்கும் தரக்குறைவான சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது அந்த வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிவிடலாமா என்று ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இதற்காக கமல் வருத்தப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை’என்று பெரும் ஆத்திரத்தில் முழங்கியுள்ளார் இயக்குநர் அமீர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ’பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் தினம் ஒரு மட்டமான  சர்ச்சை எழுந்து வருகிறது. மதுமிதாவின் தற்கொலை சர்ச்சை அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் தொடரும் நிலையில், பிரபலங்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பேச தொடங்கியிருக்கிறார்கள். இந்த சர்ச்சைகளிலிருந்து தன்னைத் தனிப்பட்ட முறையில் கமல் காப்பாற்றிக்கொள்ள விஜய் டிவியின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

 இந்த நிலையில், பிரபல இயக்குநர் அமீர், நான் நினைத்தால் பிக் பாஸ் வீடு இருக்கும் ஸ்டியோவை அடித்து நொறுக்கிடுவேன், என்று ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் நடிகர் சரவணன் மூலம் இயக்குநர் சேரன் அவமரியாதை செய்யப்பட்டார். நடிகர் சரவணன் சேரனை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர்க பலர் சரவணனுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிக் பாஸ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சேரனை காப்பாற்றுவோம், என்றும் கூறினார்கள். இயக்குநர்களின் எதிர்ப்பையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால், அதற்கு காரணமாக வேறு ஒன்றை சொல்லி கமல்  மழுப்பினார்.

 இந்த நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் அமீர், ”மக்கள் அனைவரும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல் தெரிகிறது. ஆனால், எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றி பேசும்போதெல்லாம் கோபமாக வருகிறது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஆனால், சமீபத்தில் என் நண்பர் ஒரு வீடியோவை காண்பித்து அதை கண்டிப்பாக பார்க்க சொன்னார். அந்த வீடியோவில், நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் சேரனை, ஒருமையில் திட்டுகிறார். இன்னொரு பெண், அவர் என்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று புகார் சொல்கிறார். இதைக்கேட்டு துடித்துப்போன சேரன் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குள் ஆத்திரம் பொங்குகிறது.

 நான் நினைத்தால் பிக் பாஸ் வீடு இருக்கும் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கி அங்கிருந்து சேரனை அழைத்துக்கொண்டு வந்திருப்பேன், ஆனால் அதை செய்யாமல் நான் அமைதிக்காத்து வருகிறேன். எனக்கு பிடிக்காத டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.” என்று ஆவேசமாக கூறினார்.ஏற்கனவே தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை மதுமிதா மீது விஜய் டிவி தரப்பு போலீசில் புகார் அளித்திருக்கும் நிலையில், தற்போது இயக்குநர் அமீர், பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்குவேன், என்று கூறியிருப்பதால் அவர் மீது விஜய் டிவி தரப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இயக்குநர் அமீர் மீதும் போலீசில் புகார் அளிக்குமா? 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்