
‘2.0’ வுக்குப் பின்னர் இனிமேல் எப்போதும் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்ற உறுதியான முடிவு எடுத்ததாலோ என்னவோ தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜாதான் என்று முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
‘ஜெண்டில்மேன்’ துவங்கி ‘2.0’ வரை 13 படங்களை இயக்கியுள்ள ஷங்கர் இதுவரை இளையராஜா இருக்கிற பக்கம் கூட திரும்பிப் பார்த்ததில்லை. அவரது ‘எஸ்’ பிக்ஷர்ஸ் தயாரித்த படங்களுக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. தாமிரா இயக்கத்தில் ‘எஸ்’ பிக்ஷர்ஸ் தயாரித்த ‘ரெட்டச்சுழி’ படத்துக்கு மட்டும் ராஜாவின் மூத்த பிள்ளை கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.
தற்போது கமலுடன் இணைந்திருக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர். ரகுமானை விட்டு ஷங்கர் நிரந்தரமாகப் பிரிகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமலின் மகள் ஷ்ருதி ‘உங்களுக்குப் பிடித்த பாடல் எது?’ என்று கேட்டபோது,’ ஒன்றல்ல இரண்டல்ல, எனக்கு எல்லா இளையராஜா பாடல்களையுமே பிடிக்கும்’ என்று மனம் திறந்து பதிலளித்தார் ஷங்கர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.