’அந்த பயம் இருக்கட்டும்’ ... சூர்யா ரசிகர்களைக் கண்டு நடுங்கும் செல்வராகவன்...

Published : Dec 15, 2018, 05:10 PM ISTUpdated : Dec 15, 2018, 05:11 PM IST
’அந்த பயம் இருக்கட்டும்’ ... சூர்யா ரசிகர்களைக் கண்டு நடுங்கும் செல்வராகவன்...

சுருக்கம்

இதனால் கொதிப்படைந்த சூர்யா ரசிகர்கள் வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். தனுஷ் படத்தைப்போல சூர்யா படத்தையும் லேட் பண்ணாதீங்க என்றும் என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரிஞ்சாகணும் என்றும் தொடர்ந்து நச்சரித்து வந்தனர்.


தனது இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்‌ஷன் செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்ய ஆரம்பித்திருக்கிறார் செல்வராகவன்.

பொதுவாக சூர்யாவின் படங்கள் ஒரே மூச்சாக படப்பிடிப்பு நடந்து தொடங்கிய ஆறே மாதங்களில் திரைக்கு வந்துவிடும். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ‘என்.ஜி.கே’ படம் தொடங்கி ஒருவருடமாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மட்டுமல்லாமல் அப்படம் என்ன நிலைமையில் இருக்கிறது என்பது குறித்த அப்டேட்களையும் இயக்குநர் தரப்பு வெளியிடவில்லை.

இதனால் கொதிப்படைந்த சூர்யா ரசிகர்கள் வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். தனுஷ் படத்தைப்போல சூர்யா படத்தையும் லேட் பண்ணாதீங்க என்றும் என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரிஞ்சாகணும் என்றும் தொடர்ந்து நச்சரித்து வந்தனர்.

இந்த நச்சரிப்புகள் அதிகமாகவே வெளியுலகத் தொடர்புக்கு வந்த செல்வராகவன் தனக்கு உடல்நலமில்லாததால் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டதாகவும், இனி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி அது பற்றிய அப்டேட்களை உடனுக்குடன் வெளியிட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதை ஒட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை துவக்கிய செல்வராகவன் ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு விபரங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்துவருகிறார். இதை வரவேற்று ‘அந்த பயம் இருக்கட்டும்’ என்று கமெண்ட் செய்துவருகிறார்கள் ரசிகர்கள்.

ஒரு படத்தை நல்லபடியாக முடிக்க ஹீரோ, தயாரிப்பாளர்களுக்கு பயந்தது போய் யாருக்கெல்லாம் பயப்படவேண்டியிருக்கு பாருங்க...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!