மிஸ் இந்தியாவை தன் வசமாக்கிய சிம்பு! வயித்தெரிச்சலில் இளம் நடிகர்கள்!

Published : Sep 17, 2018, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
மிஸ் இந்தியாவை தன் வசமாக்கிய சிம்பு! வயித்தெரிச்சலில் இளம் நடிகர்கள்!

சுருக்கம்

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் "செக்க சிவந்த வானம்" படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.  

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் "செக்க சிவந்த வானம்" படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.

பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.

மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

பிரபல மாடலான டயானா எரப்பா,  இயக்குனரான மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் மூலம், நடிகர் சிம்புக்கு ஜோடியாகியுள்ளார். மிஸ் இந்திய போட்டியில் கலந்துகொண்ட ஒரு இவர், முதல் முறையாக சிம்புவுக்கு ஜோடியாக மாறியுள்ளது பல இளம் நடிகர்களை வயித்தெரிச்சல் பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்