கதாநாயகன் முக்கியம் இல்லை.... கதை தான் நாயகன்.... வசூலில் நிரூபித்த படங்கள்....!!!

First Published Jan 30, 2017, 5:01 PM IST
Highlights


பொதுவாகவே சென்னை பாக்ஸ் ஆபீஸி வசூலை நிர்ணயம் செய்வது  பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமே சாதனை வசூலை புரிந்து வருகின்றன. 

சிறிய ஹீரோக்கள் படங்களில்  மிகவும் அபூர்வமாக வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்கள் மட்டுமே அவ்வப்போது சென்னையில்  வசூலில் முத்திரை பதிப்பதுண்டு. 

அந்த வகையில்  சென்னை வசூலில் சமீபத்தில் சாதனை செய்த படங்களாக அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' ஆகிய படங்கள் கருதப்படுகிறது.
 
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வெளியான கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' படம் கடந்த வார இறுதி நாட்களில் 8 திரையரங்குகளில் 52 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.5,09,610 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.1,44,15,690 ஆகும்
 
அதேபோல் குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளியான 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 11 திரையரங்குகளில் 98 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.18,16,060 வசூல் செய்துள்ளது. ஜனவரி 26 முதல் ஜனவரி 29 முதல் இந்த படம் ரூ.25,32,040 வசூல் செய்துள்ளது.
 
பெரிய ஸ்டார்கள் இல்லாமல் இரு படங்களும் நல்ல கதைக்காகவே வசூல் மழை பொழிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!