நடுக்காட்டில் கீர்த்தி சுரேஷ்...விரட்டும் சைக்கோ கில்லர்...பரபரப்புக்கு பஞ்சமில்லாத “பெண்குயின்” டிரெய்லர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 11, 2020, 3:40 PM IST
Highlights

டிரெய்லர் ஆரம்பிக்கும் போதே நமக்குள் ஒரு விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது. காணாமல் போன மகனை தேடி அலையும் அம்மாவாக கீர்த்தி சுரேஷ் பரிதாபமாக காட்சியளிக்கிறார். 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதையும் படிங்க: 

தேசிய விருது பெற்ற பின்னர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், “பெண்குயின்” படத்தில் நிறைமாத கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என பல பரிமாணங்களில் நடித்துள்ளார். இதற்காக தன்னுடைய உடல் தோற்றைத்தையே முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஒரு நிமிடம் 19 விநாடிகள் ஓடக்கூடிய டீசரில் குழந்தையை காணாமல் தவிக்கும் தாயாக கீர்த்தி சுரேஷ் தனது ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

இதையும் படிங்க: 

“பெண்குயின்” படத்தின் டீசரை த்ரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்ஸி ஆகியோர் வெளியிட்டனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரை அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் 4 நடிகைகள் வெளியிட்டனர். அதேபாணியில் இன்று தனுஷ், மோகன்லால், நானி ஆகியோர் பெண்குயின் பட டிரெய்லரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகர் தனுஷ் தமிழ் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: 

டிரெய்லர் ஆரம்பிக்கும் போதே நமக்குள் ஒரு விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது. காணாமல் போன மகனை தேடி அலையும் அம்மாவாக கீர்த்தி சுரேஷ் பரிதாபமாக காட்சியளிக்கிறார். யாராலோ, எதற்காகவோ கடத்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் மகன் உயிரோடு இருக்கிறாரா?, இல்லையா?என்ற பதற்றம் உருவாகிறது. இடை, இடையே காட்டப்படும் கொலைகாரனின் வித்தியாசமான உருவமும், பிரத்யேக திகில் மியூசிக்கும் படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆவலை தூண்டிவிடுகிறது. 

click me!