என்னை ஆச்சரியப்படுத்திய மனிதர் ஜெ.அன்பழகன்! மனம் உருக இரங்கல் தெரிவித்த ஜெயம் ரவி!

By manimegalai aFirst Published Jun 11, 2020, 2:53 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த,   திமுக கட்சியின் முக்கிய உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த,   திமுக கட்சியின் முக்கிய உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய இழப்பு கட்சி பிரமுகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, ஒரு தயாரிப்பாளராக ஜெ. அன்பழகன் எப்படி பட்ட மனிதன் என்று கூறி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். 

ஜெ.அன்பழகன் அரசியல் தலைவர் என்பதை தாண்டி, நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான, 'ஆதிபகவன்' படத்தை தயாரித்தவர். இதனால் பலமுறை இவரை சந்திக்கும் வாய்ப்பும். அவருடன் பேசும் வாய்ப்புகளும் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது. இதனால் தன்னுடைய சொந்த அனுபவத்தை கொண்டு, ஜெ.அன்பகன் பற்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள ஜெயம் ரவி...  ஜெ.அன்பழகனின் மறைவு, தன்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளதாகவும், திறமை வாய்ந்த ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர், என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார்.  மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தனது வாழ்க்கையை நிரந்தரமாக அர்ப்பணித்தவர் அவர், எனது 'ஆதி பகவன்' திரைப்படத்தை தயாரித்தபோது அவருடன் பல முறை நேரங்களை செலவழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. 

அந்த நினைவுகள் இன்னும் என் இதயத்தில் பாதித்துள்ளது என்றும், அவர் கலை மற்றும் சினிமாவைப் நேசிக்கும் விதம்  பலமுறை தன்னைஆச்சரியப்படுத்தியது. நான் உறுதியாக நம்புகிறேன், அவர் மக்களின் இதயங்களில் என்றென்றும் இருப்பர் என ஜெயம் ரவி கூறியுள்ளார். 

 COVID 19 வைரஸ் பரவிய சமயத்தில், அவரது உடல்நிலையை கூட கவனிக்காமல் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக அவர் எடுத்த முயற்சிகள் ஒரு புனிதமான சேவை. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும், அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என தன்னுடைய பிராத்தனைகளை தெரிவித்துள்ளார்.

click me!