
‘மாரி 2’ ரிலீஸ் உற்சாகத்தில், செய்வதறியாது திகைத்து நிற்பது என்பார்களே அப்படி ஒரு உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ். நேற்று மேடையில் யுவன், தெருவில் நின்றிருக்கவேண்டிய எங்களை இப்படி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர் என்றவர், இன்று இளையராஜா என் கடவுள் என்கிறார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் யுவனுடன் ‘மாரி2’ படத்துக்கு கைகோர்த்திருக்கும் தனுஷ், அப்பட பாடல்கள் பெரும் ஹிட்டடித்திருப்பதால் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். அப்படத்தில்’வானம் பொழியாம பூமி வெளையுமா கூறு’...என்ற பாடலை இளையராஜா பாடிக்கொடுத்திருக்கிறார். பாடலை எழுதியவர் சாட்சாத் தனுஷேதான்.
அப்பாடல் பதிவின் போது தான் அடைந்த பரவசம் குறித்து தற்போது பகிர்ந்துகொண்ட தனுஷ், ‘அவரை சந்தித்தது எனக்கு தெய்வ தரிசனம்தான். அவர் பாடுவதற்காக நான் எழுதிக்கொடுத்த பாடலைத் திருத்திக்கொடுத்தார். ஒரு பக்தனாக அவர் முன்னால் அமர்ந்திருந்தபோது எடுத்த வீடியோக்களை ஒவ்வொன்றாக விரைவில் வெளியிடுவேன். அவற்றை என் வாழ்நாள் முழுக்க பொக்கிஷம் போல் பாதுகாப்பேன்’ என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.