அட இன்னமும் மாஜி மாமனார் மீது பாசம் விட்டு போகலையே? சூப்பர் ஸ்டார் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்

Published : Aug 22, 2022, 06:36 PM ISTUpdated : Aug 22, 2022, 06:37 PM IST
அட இன்னமும் மாஜி மாமனார் மீது பாசம் விட்டு போகலையே? சூப்பர் ஸ்டார் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்

சுருக்கம்

ஜெயிலர் படம் குறித்த போஸ்டர் ஒன்றையே சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் கம்பீரமாக புரங்கைகளை கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்து வயதான தோற்றத்தில் காணப்பட்டார் ரஜினிகாந்த். இந்த போஸ்டரை ரீ ட்விட் செய்துள்ள தனுஷ் வாவ் என குறிப்பிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்தின் துவங்கியுள்ளார். சூப்பர் ஸ்டாரை அட்டகாசமான தோற்றத்தில் காணும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். தலைவர் 169 என முன்னதாக பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு டிரைலர் என தற்போது சமீபத்தில் டைட்டிலை அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காணப்பட்டார். இதனால் பேட்ட படம் போல இந்த படத்தின் கதை இருக்கலாம் என ஒரு புறம் பேச்சு அடிபடுகிறது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் 20 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் நடிக்க உள்ளார். முன்னதாக படையப்பாவில் நீலாம்பரியாக வந்து மிரட்டி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். ரஜினிகாந்த் சர்வாதிகாரியாக அவதாரத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு...இரண்டு தலைமுறை ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறங்கிய நெல்சன்..வேறலெவலில் ரெடியாகும் ஜெயிலர்..

ஜெய்லரின் பெரும்பகுதி ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தான் படமாக்கப்பட உள்ளதா? இப்படத்தில் தெலுங்கு நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரோடு ஐஸ்வர்யா ராய் பச்சன், ரஜினி நடிக்கும் படத்தில் முன்னணிப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் முன்னதாக எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


 
அதே நேரத்தில் யோகி பாபுவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளாராம். படத்தின் முழு நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக இதற்கு அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைக்க உள்ளார் என்பது வீடியோ மூலம் தெரிவித்து இருந்தது. தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...திடீரென சென்னைக்கு விசிட் அடித்த ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன்..என்ன விஷயம் தெரியுமா?

இந்த படம் குறித்த போஸ்டர் ஒன்றையே சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் கம்பீரமாக  புரங்கைகளை கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்து வயதான தோற்றத்தில் காணப்பட்டார் ரஜினிகாந்த். இந்த போஸ்டரை ரீ ட்விட் செய்துள்ள தனுஷ் வாவ் என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு...நயன்தாரா ரேஞ்சுக்கு கிளாமரில் அடிதூள் கிளப்பும் பிரியா பவானி சங்கர்

சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவும், தனுசும் விவாகரத்து செய்து கொண்டனர். 18 வருட காதல் பந்தத்தை முறித்துக் கொண்டதற்கான காரணங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடைசியாக ரஜினி நடித்த அண்ணாத்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் தங்கையாகவும் மீனா குஷ்பூ நயன்தாரா என மூன்று நாயகிகளும் தோன்றியிருந்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Akshay Kumar House: அக்ஷய் குமார் வீட்டில் காந்தி தங்கிய இடம்.?! கடல் பார்த்த பங்களாவை சுத்தி பாத்தா சொக்கி போவீங்க.!