நெற்றியில் வடியும் ரத்தத்தோடு, நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு மத்தியில் தனுஷ் நிற்கும் அந்த போஸ்டர் தற்பொழுது அவருடைய ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பிரபல சத்யஜோதி நிறுவனம் சார்பில் அருண் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
இந்த படத்தில் கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பிரபல நடிகர் தனுஷ். இலங்கையின் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு போராளியான கேப்டன் மில்லர் என்பவர் வாழ்க்கையை தழுவி இந்த திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
The Most awaited Arrival 🔥
Our for you all 🤗 pic.twitter.com/sCQyVnC1yE
இதையும் படியுங்கள் : மகளுக்காக குழந்தையாகவே மாறி கமல்ஹாசன் செய்த விஷயம்!
பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவ்ராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷன், மூத்த தமிழ் நடிகர் நாசர், பாலசரவணன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வந்தது.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி நிறுவனம் தற்பொழுது அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
கையில் மிகப்பெரிய துப்பாக்கி ஏந்தி நெற்றியில் வடியும் ரத்தத்தோடு, நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு மத்தியில் தனுஷ் நிற்கும் அந்த போஸ்டர் தற்பொழுது அவருடைய ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : TRPயில் விஜய் டிவி சீரியல்களை தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்!