
தனுஷ் தற்போது பல படங்களில் கமிட் ஆகிவருகின்றார். இதில் எல்லோருக்கும் ஆச்சரியமாக சௌந்தர்யா இயக்கும் விஜபி-2 பூஜையும் சமீபத்தில் போட்டனர்.
இதை தொடர்ந்து இந்த கூட்டணி எப்படி உருவானது என பலருக்கும் ஆச்சரியம். ஒரு நாள் தாணு, ரஜினியை பார்க்க செல்ல, தனுஷ் மகன் யாத்ரா ‘எங்க தாத்தாவ வச்சு படம் பண்றீங்க, ஏன் எங்க அப்பாவ வச்சு பண்ண மாட்டீங்களா’ என கேட்க தாணு செல்லமாக தட்டிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
அதை தொடர்ந்து சௌந்தர்யா, தாணுவிடம் ஒரு கதை சொல்ல, இதற்கு தனுஷ் சரியாக இருப்பார் என அவரிடம் கதை போக, தனுஷ் சொன்ன சில திருத்தங்களுக்கு பிறகு இந்த கூட்டணி உருவாகியுள்ளது.
எப்படியோ யாத்ரா கேட்ட கேள்வி படமாகவே உருவாகிவிட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.