கலக்கும் தனுஷின் ஹாலிவுட் டீசர்... நீங்க பாத்தாச்சா....

 
Published : Feb 10, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
கலக்கும் தனுஷின் ஹாலிவுட் டீசர்... நீங்க பாத்தாச்சா....

சுருக்கம்

dhanush hollywood movie tesar

பன்முகம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். தனுஷ் முன்னணி நடிகராக வருவதற்கு  மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.
தனுஷ் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இசையமைப்பாளர்,இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.



தேசிய விருது

தனுஷ் தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 'காதல் கொண்டேன்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நடிகர் என்று அறியப்பட்டார். அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் 'ஆடுகளம்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.

ஹாலிவுட் படம்

தொடர்ந்து சில பாலிவுட் படங்களிலும் நடித்த இவர்  சில ஆண்டுகளுக்கு முன் 'தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆஃப்  தி ஃபகிர்( The Extraordinary journey of the fakir) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அப்படத்தின் தயாரிப்பில் நீண்ட நாட்கள் ஆனதால் அப்படத்தை இயக்க இருந்த இயக்குநர் திடிரென்று அப்படத்தில் இருந்து விலகினார். இதனால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.

டீசர்

இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியாரிட்டி அபேல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!