’மாரி 2’ ரிலீஸ் பஞ்சாயத்து... விஷாலை ஒருமையில் திட்டித்தீர்த்த தனுஷ்...

By vinoth kumarFirst Published Nov 30, 2018, 10:39 AM IST
Highlights

தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் விஷாலின் கரம் ஓவ்வொரு நாளும் மேலும் மேலும் வீக்காகிக்கொண்டே வருகிறது. விஜய் ஆண்டனி, சிம்பு வரிசையில் தற்போது தனுஷும் விஷாலை முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கியிருப்பதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் விஷால்.


தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் விஷாலின் கரம் ஓவ்வொரு நாளும் மேலும் மேலும் வீக்காகிக்கொண்டே வருகிறது. விஜய் ஆண்டனி, சிம்பு வரிசையில் தற்போது தனுஷும் விஷாலை முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கியிருப்பதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் விஷால்.

தமிழ்த் திரைப்படத் துறையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், படத் தயாரிப்பாளர்கள் நலன் கருதி ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதியை ஒழுங்குபடுத்திக் கொடுப்பது இக்கமிட்டியின் பணி. ஆனால் இக்கமிட்டியை பெரிய பட்ஜெட் படங்கள் உதாசீனப்படுத்தின. நடைமுறையில் ஒருமுறை கூட வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. சங்கத்தை மதிக்காமல் அனைவரும் இஷ்டத்துக்கு படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்தனர். விஷால் சொல்லை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 14 அன்று சீதக்காதி, டிசம்பர் 21 அன்று ’அடங்க மறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம், டிசம்பர் 28இல் கனா ஆகிய படங்களை ரிலீஸ் செய்து கொள்ள கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது.  ஜெயம் ரவியின் அடங்க மறு திரைப்படம் நீண்ட நாட்கள் காத்திருந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தனுஷ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள திரைப்படமான மாரி - 2 அதே நாளில் வருவதாக தற்போது திடீரென  அறிவிக்கப்பட்டுள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய நிலவரப்படி ‘மாரி2’ ஜனவரி மாதம் வெளியிடப்பட இருப்பதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனவரியில் தனது மாமனாரின் ‘பேட்ட’ அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ஆகியவை வெளிவருவதால் மாரியை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திடீரென முடிவெடுத்துள்ளார் தனுஷ்.

இந்தப் பஞ்சாயத்து குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தைகளில் விஷாலை ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் திட்டித்தீர்த்தாராம் தனுஷ். இதை ஒட்டி இன்று துவங்கும் தயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து குறைந்த பட்சம் ஒருவாரத்துக்காவது நீடிக்கும் என்றும் முடிவில் வழக்கம்போல் விஷாலே மண்ணைக் கவ்வுவார் என்றும் சங்க வட்டாரங்கள் சொல்லுகின்றன.
 

click me!