
Idli Shop in Rohini Theatre : தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் சத்யராஜ், நித்யா மேனன், பார்த்திபன், இளவரசு, அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ஒண்டர்பார் நிறுவனம் சார்பில் தனுஷும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு இட்லி கடை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக 7 மணி முதலே தியேட்டர் முன் குவியத் தொடங்கிய ரசிகர்கள், மேள தாளங்கள் முழங்க ஆடிப் பாடி, தனுஷின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் தடபுடலாக கொண்டாடினர். சென்னையில் உள்ள தனுஷ் ரசிகர்கள் இதில் ஒரு படி மேலே போய் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார்கள். அதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற ரோகிணி திரையரங்கில் இன்று காலை முதலே படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக இட்லி, சாம்பார், சட்னி வழங்கி இட்லி கடை படத்தின் ரிலீஸ் கொண்டாட்டத்தை புதுவிதமாக செய்து அசத்தி உள்ளனர். இட்லி கடை படத்திற்காக ஒரு இட்லி கடையே தியேட்டர் வளாகத்தில் போட்டு, அங்கு சுடசுட இட்லி பரிமாறி இருக்கிறார்கள். தனுஷ் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இட்லி கடை திரைப்படம் நடிகர் தனுஷ் இயக்கிய நான்காவது திரைப்படம் ஆகும். இதற்கு முன்னர் பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கி இருந்தார் தனுஷ். இந்த நான்கு படங்களுமே வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகி இருந்தன. இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் இட்லி கடை படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தனுஷ் நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் ஜொலித்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.