
Kuberaa Trailer Released: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் நடிகர் தனுஷ். தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்றிருந்தாலும் சினிமா மீதான காதல் அவரை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான ராயன் படத்திற்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் குபேரா படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குபேரா. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 193 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். தமிழ் சினிமாவில் அதிக ரன்னிங் டைம் கொண்ட படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. அதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவர் மட்டுமே காயத்துடன் தப்பிய நிலையில் மற்ற அனைவரும் பரிதாமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. அதோடு அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதவே, அங்கு தங்கியிருந்த 20 மருத்துவர்கள் உள்பட பலரும் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் இதன் காரணமாகத்தான் குபேரா பட தயாரிப்பாளர் தனது பட விழாவை ரத்து செய்துள்ளார். இந்த விழாவிற்காக முக்கிய பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விபத்து குபேரா டிரைலரை ரத்து செய்ய வைத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நாகர்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து லாக்கரில் கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஸ்டேஜில் வைத்து குபேரா படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை இயக்குநர் சேகர் கம்முலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலில் தெலுங்கு படத்திற்கான டிரைலர் வெளியிடப்பட்டது.
https://x.com/SVCLLP/status/1934252094674051216
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.