
Priyanka Deshpande and Start Music Season 6 : விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகள் தான் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பல ரியாலிட்டி ஷோக்களை இருவரும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும், இதில் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்காத ரியாலிட்டி ஷோ எது என்றால் அது பிக்பாஸ் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி என்று சொல்லும் அளவிற்கு எல்லா ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா தேஷ்பாண்டே ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி அவர் வயதானவரை திருமணம் செய்து கொண்டதாகவும் விமர்சிக்கப்பட்டார். பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் டிஜே வசி சச்சி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஹனிமூனுக்கு வெளிநாடு சென்று வந்தனர். இந்த நிலையில் தான் விஜய் டிவி பிரியங்கா புதிதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி அவர் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ இன்று ஒளிபரப்பு செய்ய்யப்பட்டது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த ஸ்டார்ட் மியூசிக் ரியாலிட்டி ஷோவின் 6ஆவது சீசன் இன்று வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய புதுப்பொலிவுடன் புதுமையான விளையாட்டுகளுடன் இந்த ரியாலிட்டி ஷோ இன்று ஒளிபரப்பானது. இதில் தனக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தாலும் அதனை புன்னகையுடன் கொஞ்சம் காலில் டேமேஜ் தான். கொஞ்ச நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறார்கள். அந்த ரெஸ்டுலேயும் உங்களுக்கு பெஸ்ட் கொடுக்கணும். பிராக்ஷர் செட்டு பாஸ் ஃபட் நம்ம தான் இங்க பாஸ் என்று சொல்லி ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார்.
சரி, அவருதான் காலில் கட்டு போட்டிருக்கிறார் என்று பார்த்தால், வந்த போட்டியாளும் அவருக்கு போட்டியாக கையில் கட்டு போட்டிருக்கிறார். ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பொன்னி சீரியல் நடிகர் சபரி நாதன் கையில் அடிபட்டு வந்துள்ளார். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய சபரிநாதனுக்கு கையில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 நிகழ்ச்சிக்கு வந்து கலக்கியுள்ளார்.
ஸ்டார்ட் மியூசிக் 6 ரியாலிட்டி ஷோவின் முதல் எபிசோடான இன்று விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதிர் மற்றும் ராஜீ, பொன்னி சீரியல் சக்திவேல் மற்றும் பொன்னி, சின்ன மருமகள் சேதுபதி, தமிழ்செல்வி ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
https://www.instagram.com/reel/DK6AvPLKBHd/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.