2025-ல் ஹாட்ரிக் ஹிட்! ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன தனுஷ் - 2026-ல் காத்திருக்கும் மெகா பிளான்கள்!

Published : Jan 01, 2026, 10:44 PM IST
Dhanush 3 Consecutive Hits 2025 Thank You Note To his Fans Aruvadai New Movie

சுருக்கம்

2025 ஆம் ஆண்டில் 3 படங்கள் ஹிட்டாக காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் மட்டும் கடந்த 2025 ஆம் ஆண்டு 3 படங்கள் வெளியாகின. அதில் குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள். இந்த 3 படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் மற்ற மொழி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தன. இதன் காரணமாக இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்ததோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த 3 படங்களுமே முறையே 138.1 கோடி, ரூ.161.96 கோடி மற்றும் 71.85 கோடி என்று வசூல் குவித்தன. இதன் காரணமாக தனுஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2025 ஆம் ஆண்டு உண்மையில் மறக்க முடியாத வருடம். இந்த 3 படங்களுமே சூப்பர் ஹிட்டாவதை பார்க்க நான் போற்றும் ஆசிர்வாதம். ரசிகர்களது அன்பும், ஆதரவும் தான் ஒருபடத்தை ஹிட் கொடுக்கும். அப்படி எனக்கு ஹிட் கொடுத்த படம் தான் குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெய்ன் என்று கூறியிருக்கிறார்.

இந்தப் படங்களின் வரிசையில் தற்போது தனுஷ் தனது 54ஆவது படமான டி54 படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அறுவடை என்று டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று தெரிகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ரசிகர்களுக்கு செம ட்ரீட்! 'ஸ்பிரிட்' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!
சிரஞ்சீவிக்காக ரூல்ஸை மாற்றிக் கொண்ட நயன்தாரா! முதல் முறையாக பட புரோமோஷனில் பிஸி - ஆச்சரியத்தில் கோலிவுட்!