இப்போ பேசலன்னா எப்போ பேசுறது..? மெர்சலை நேரடியா வெளுத்து வாங்கிய தன்ஷிகா!

 
Published : Nov 13, 2017, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
இப்போ பேசலன்னா எப்போ பேசுறது..? மெர்சலை நேரடியா வெளுத்து வாங்கிய தன்ஷிகா!

சுருக்கம்

dhanshika talk about mersal

நடிகை தன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள 'விழித்திரு' திரைப்படம், கடந்த மாதமே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது. ஆனால் தயாரிப்பாளர்கள் பிரச்னையால் நிறுத்தி வைக்கப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் 'விழித்திரு' படம் மட்டும் இன்றி, 10 சிறு படஜெட் படங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதனால் இந்தப் படத்தின், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது... அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை தன்ஷிகா, 'விழித்திரு' திரைப்படம் முன்பே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது, தயாரிப்பாளர் பிரச்னையால் தான் நிறுத்தி வைக்கப்பட்டது.  ஆனால் எல்லாப் பிரச்னைகளும் முடிந்த பின்பு எங்கள் படத்தையோ மற்ற சிறு பட்ஜெட் படங்களையோ யாரும் கவனிக்க வில்லை...  தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த 'மெர்சல்'  படம் வெளியாவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

இதில் இருந்து காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது." என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் "நான் இப்போ தைரியமா பேசலைன்னா வேறு எப்போ பேச முடியும்? நான் மற்ற மொழிப் படங்களிலும் நடிக்கிறேன். அங்கெல்லாம் படம் கான்செப்ட் நன்றாக இருந்தால் தான் படம் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமாஅப்படி இல்லை" என அவர் மேலும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?