நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுதொடர்பாக டெல்லி போலீசார் 4 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலில் குரல் கொடுத்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா தான். அவரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட டீப் ஃபேக் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ தொடர்பாக டெல்லி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நான்குபேரை அடையாளம் கண்டு அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணையும் நடத்தி வருகிறதாம் டெல்லி போலீஸ். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் போலி ஐடியை பயன்படுத்தி இந்த டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் விபிஎன் பயன்படுத்தி இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களை போலீசாரிடம் சிக்க வைத்தது மெட்டா நிறுவனம் தானாம். போலீசார் மெட்டா நிறுவனத்திடம் சம்மந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்களின் ஐடி விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டு தான் இந்த நான்கு பேரையும் பிடித்துள்ளார்களாம். இந்த விவகாரத்தில் மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளார்களாம். விசாரணையின் முடிவில் தான் இந்த நபர்கள் மீது எந்தவித ஆக்ஷன் எடுக்கப்படும் என்பது தெரியவரும்.
இதையும் படியுங்கள்... BOSS-ஆ இல்ல PUZZLE-ஆ? தளபதி 68 படத்தின் டைட்டில் என்ன? தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்