
பிரபல தனியார் தொலைக்காட்சியில்,தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தெய்வமகள்
இல்லத்தரசிகள் வீட்டில் மிகவும் பிசியாக இருக்கும் நேரம் இந்த சீரியல் வரும் நேரமான இரவு 8 மணி தான்...
பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களான சத்தியா, பிரகாஷ்,மற்றும் வில்லி காயத்ரி மக்களிடேயே மிகவும் பிரபலமானவர்.
சாதரணமாக படமோ அல்லது சீரியலிலோ வரும் ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் நினைவுக்கு வருவார்கள்.. இவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருப்பார்கள்.
அந்த வரிசையில்,வில்லி காயத்ரி இல்லாமல் இந்த சீரியலுக்கு உயிரோட்டம் இல்லை என்றே கூறலாம்.அந்த அளவிற்கு ஒரு வில்லியாகவும்,சிறந்த நடிகையாகவும், ஆரம்பித்த நாள் முதல் செம சூடாக விறு விருப்பாக இந்த சீரியலை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் தான்..காயு டார்லிங் என்ற வில்லி காயத்ரி.
முடிவுக்கு வருகிறதா தெய்வமகள்..?
தெய்வ மகள் சீரியலில் வில்லியாக வலம் வந்த காயு டார்லிங்,நேற்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில், பிரகாஷ் கொலை செய்துவிடுவதாக காட்சி வந்தது.
இதன் காரணமாக இந்த சீரியல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை பிரதிபலிக்கும் விதமாக,காயத்திரி அண்ணியாருக்கு ரசிகர்கள் ஸ்பெஷல் மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர்
அதில், "பெண்ணாய் பிறந்து பிரகாஷ் குடும்பத்தை ஆட்டிப்படைத்து நம்பி, மந்த்ரா என்னும் பலரை கொன்று வீர மரணம் அடைந்த உங்களை கண்ணீருடன் வழி அனுப்புகிறோம்..உங்கள் பிரிவில் வாடும் உள்ளங்கள்.."
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மீம்ஸ் போஸ்டர் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.