தீபிகாவை உயிருடன் கொளுத்தினால் 1 கோடி பரிசு !! பாரதீய சத்ரிய மகாசபை அறிவிப்பால் சர்ச்சை !!!

 
Published : Nov 20, 2017, 07:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
தீபிகாவை உயிருடன் கொளுத்தினால் 1 கோடி பரிசு !! பாரதீய சத்ரிய மகாசபை அறிவிப்பால் சர்ச்சை !!!

சுருக்கம்

deepika problem in padmavathi film

பத்மாவதி திரைப்படத்தில் நடித்திருக்கும் தீபிகாவை உயிருடன் கொளுத்தினால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாரதீய சத்ரிய மகாசபை என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.அறிவிப்பால் சர்ச்சை !!!

தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர்.

பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில் அப்படத்தில் நடித்த தீபிகா படுகோனேவிற்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. ‘பத்மாவதி’  படத்துக்கு எழுந்த எதிர்ப்பால், அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதனை பாராட்டிய அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என கூறிஉள்ளார்.

தொடர்ந்து மிரட்டல் எழுந்து உள்ளநிலையில் தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதீய சத்ரிய மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது நடிகை தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தினர்.

 

பின்னர், கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர்சிங் பேசுகையில், நடிகை தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார். 

ராணி பத்மாவதியின் தியாகம் தீபிகாவுக்கு ஒருபோதும் தெரியாது.  என்றும்  உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பரிசை அறிவிக்கிறோம்’ என்று புவனேஸ்வர்சிங்  தெரவித்துள்ளார். 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்