தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் காதல் முடிவுக்கு வந்தது...!

Asianet News Tamil  
Published : Jun 16, 2018, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் காதல் முடிவுக்கு வந்தது...!

சுருக்கம்

deepika padukone ranveer singh marriage is going to held by coming november

தீபிகா படுகோனே ரன்வீர் சிங் காதல் முடிவுக்கு வந்தது...!

பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே விரைவில் தன் காதலரும் நடிகருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்ய உள்ளார்

தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானவர் தான் தீபிகா படுகோனே...

இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் பத்மாவத். இந்த திரைப்பபடம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பெரும் வரவேற்பை பெற்றவர் தீபிகா.

இவர் பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரன்வீர். இவருடன் காதல் வலையில் விழுந்த தீபிகா சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர்.

தற்போது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து உள்ளனர்

இவர்களின் திருமணம் வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில், நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துறை தூதுவராக ரன்வீர் சிங் இருக்கிறார். எனவே தங்கள் நாட்டில் திருமணம் செய்து கொள்ளுமாறு, அந்நாட்டு அரசாங்கம் ரன்வீருக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

ஆனால் இத்தாலியில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என தீபிகா தெரிவித்து உள்ளதால், அந்நாட்டு அரசாங்கம் அதற்கான ஏற்பாடுகள் செய்ய முன்வந்துள்ளது.

இவர்களுடைய புது வாழ்க்கை தொடங்குவதற்கு மும்பையில் இரண்டு தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளனராம் இந்த காதல் ஜோடிகள்..

இவர்களின் டும் டும் டும் திருமணத்திற்கு சென்று வாழ்த்து தெரிவிக்க பாலிவுட் பிரபலங்கள் ஆவலாக உள்ளனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jana nayagan: தடை விலகுமா? தணிக்கை கிடைக்குமா? - விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்!
Jana nayagan: தடை விலகுமா? தணிக்கை கிடைக்குமா? - விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்!