அட்லீ படத்திற்காக தி இன்டர்ன் படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன் – அல்லு அர்ஜூனுக்காக 100 நாள் கால்ஷீட்!

Published : Aug 19, 2025, 09:40 PM IST
அட்லீ படத்திற்காக தி இன்டர்ன் படத்திலிருந்து விலகிய தீபிகா !

சுருக்கம்

Deepika Padukone Join With AA22A6 Movie : அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'AA22xA6' படத்திற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே ஹிட் ஆன நிலையில் இப்போது அல்லு அர்ஜூனின் 22ஆவது படமான 'AA22xA6' எற படத்தை இயக்கி வருகிறார். இது அட்லீயின் 6ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் என்று இயக்கிய 5 படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே ஒரு இயக்குநர் என்ற சாதனையையும் அட்லீ படைத்துள்ளார்.

ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ 'AA22xA6' இந்தப் படத்தை இயக்க புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜூனும் அட்லீயுடன் இணைந்துள்ளார். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக, சர்வதேச அளவில் ஆக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினர் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறாரா இல்லை என்பது குறித்து அடிக்கடி தகவல் வெளியாகி வந்த நிலையில் இந்தப்படத்தில் தீபிகா படுகோன் நடிப்பது உறுதியாகிவிட்டது.

அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்காக தீபிகா படுகோனே 100 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார். அதோடு இதற்கு முன்னதாக தி இன்டர்ன் என்ற படத்திலிருந்து விலகியிருக்கிறார். மேலும், ரஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணால் தாக்கூர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கான ஆயத்தப் பணிகளை தீபிகா தொடங்கிவிட்டதாகவும், 2025 நவம்பரில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் பிங்க்வில்லா செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அவதார் பாணியில் படம் உருவாகிறது. 2026 செப்டம்பர் வரை படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2027 இன் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுவரை அல்லு அர்ஜுன் வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்