
Deepika Padukone Joins AA22xA6 :பான் இந்தியா நடிகரான அல்லு அர்ஜுனும், அதிரடி ஆக்ஷன் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குனரான அட்லீயும் முதன்முறையாக இணைந்துள்ளனர். அவர்கள் கூட்டணியில் ஒரு பிரம்மாண்டமான படம் உருவாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதை ஒரு ஸ்பெஷல் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில் இயக்குனர் அட்லீ, படத்தின் கதையை விவரிக்க தீபிகா அதை வியந்து கேட்கிறார்.
இதையடுத்து தீபிகா நடிக்க ஓகே சொன்னதும், அவரை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் அட்லீ. அதில் கையில் வாளோடு ஆக்ஷன் காட்சியில் நடிப்பது போன்றும், கையில் வாளுடன் ஆக்ரோஷமாக குதிரையில் பயணிப்பது போன்றும் அட்லீயிடம் நடித்துக் காட்டுகிறார் தீபிகா படுகோன். அவரின் வரவால் இப்படம் பாலிவுட்டிலும் செம ரீச் ஆகும் என கூறப்படுகிறது.
அண்மையில் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தீபிகா படுகோன், அதைவிட பிரம்மாண்ட படத்தில் கமிட்டாகி பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படம் சுமார் 700 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். நடிகை தீபிகா படுகோன் அட்லீ இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இருவரும் ஜவான் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
அட்லீ ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து தெறி, பிகில், அதேபோல் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். அல்லு அர்ஜுன் சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டார். இப்போது இவ்விருவரும் இணைந்து பணியாற்றும் இந்தப் படத்தின் மீது பான்-இந்தியா அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.