விஜய்யின் ‘பிகில்’படம் தீபாவளிக்கு ரிலீஸாகுமா?...கிளம்பும் சென்சார் குழப்பங்கள்...

By Muthurama LingamFirst Published Oct 3, 2019, 12:23 PM IST
Highlights

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக இருக்கும் பிகில் படக்குழுவை ஒரு திகில் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது. இப்பட ஆடியோ ரிலீஸின்போது விஜய் பேசிய அரசியல் குத்துகளை அதிமுக அமைச்சர்களும் முதல்வரும் அவ்வளவு சாதாரணமாய் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பதிலுக்கு விஜயைத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தாலும் அத்தோடு விட்டால் மற்ற நடிகர்களும் அதுபோல் பேசக்கூடும் என்பதால் இம்முறை ‘அம்மா’பாணியில் ஒரு தக்க பாடம் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் விஜய்யின் ’பிகில்’படம் தீபாவளிக்கு ரிலீஸாவது சந்தேகமே என்று ஒரு குரூப் கிளப்பி விட ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுகவின் எடப்பாடி அரசு விஜய் மேல் உள்ள கடும் கோபத்தை இப்படத்தின் மீது காட்டக்கூடும் என்று அத்தகவல்கள் மேலும் வளர்கின்றன.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக இருக்கும் பிகில் படக்குழுவை ஒரு திகில் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது. இப்பட ஆடியோ ரிலீஸின்போது விஜய் பேசிய அரசியல் குத்துகளை அதிமுக அமைச்சர்களும் முதல்வரும் அவ்வளவு சாதாரணமாய் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பதிலுக்கு விஜயைத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தாலும் அத்தோடு விட்டால் மற்ற நடிகர்களும் அதுபோல் பேசக்கூடும் என்பதால் இம்முறை ‘அம்மா’பாணியில் ஒரு தக்க பாடம் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் இம்முறை படம் குறிவைக்கப்படுவது அரசியல் ரீதியாக என்பது தெரியாமல் சென்சார் போர்டை தங்கள் நோக்கத்துக்குப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். சமீபத்திய விதியின்படி படங்களை சென்சார் செய்ய 45 நாட்களுக்கு முன்பாகவே அப்ளை செய்யவேண்டும். ஆனால் பிகில் குழு இன்னும் அப்ளை செய்யவில்லை. வழக்கம்போல் குறுக்கு வழியில் சர்டிபிகேட் வாங்கிவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள். இம்முறை இங்கேதான் பஞ்ச் வைக்கக்காத்திருக்கிறது அதிமுக அரசு. சில சென்சார் அதிகாரிகளை விடுமுறையில் செல்லச்சொல்லிவிட்டு பிகில் படத்தைப் போட்டுப்பார்க்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.

விபரம் தெரிந்துகொண்ட தயாரிப்பாளர் முதல்வரை சந்திக்க சில தினங்களாக அப்பாயிண்ட்மெண்ட் கேட்க எதிர்தரப்பிலிருந்து இன்னும் கிரீன் சிக்னல் வரவில்லை. விஜயை சிறிய அளவிலாவது அவமானப்படுத்தாமல் பிகில் ரிலீஸை அவ்வளவு லேசில் அனுமதிக்காதாம் இம்முறை அதிமுக. இதற்கு ஹெச்.ராஜா மூலம் பாஜகவின் சப்போர்ட்டும் கிடைத்துள்ளது.

click me!