
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருவதால், வீட்டில் தற்போது உள்ள நான்கு போட்டியாளர்களை உச்சாக படுத்தவும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றவும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்றைய தினம், வனிதா சாக்ஷி உள்ளிட்ட பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்தனர். உள்ளே வந்த வனிதா சும்மா இல்லாமல், தர்ஷன் வெளியே செல்ல காரணம், ஷெரீன் என கூற அவர் தேம்பி தேம்பி அழுதது ஷெரின் ரசிகர்களுக்கு, வனிதா மேல் அதிக கோபத்தை வரவைத்து.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் , விஜய் டிவி தொகுப்பாளர்கள், நடுவர்கள், முன்னாள் போட்டியாளர்கள், சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வீட்டிற்குள் நுழைத்துள்ளனர்.
குறிப்பாக இரண்டாவது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடைசி வரை விளையாடிய தாடி பாலாஜி, தொகுப்பாளினி ப்ரியங்கா என அனைவரும் ஆட்டம் படத்தோடு வீட்டிற்குள் நுழைந்து, சாண்டியை ஒரு வழி செய்துவிட்டனர்.
பின் ப்ரியங்கா சாண்டியை தனியாக அழைத்து, வாழ்க்கையில் சூப்பர் முடிவை எடுத்து வேற மாதிரி போய்க்கொண்டு இருக்கிறோம் என கூறி, வெளியில் சாண்டிக்கு உள்ள ஆதரவை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா இப்படி கூறியுள்ளதால், ஒருவேளை சாண்டி தான் பிக்பாஸ் வின்னரா என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.