டிடி விவாகரத்து காரணம் இதுதான்...! கசிந்தது தகவல்..!

 
Published : Dec 22, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
டிடி விவாகரத்து காரணம் இதுதான்...! கசிந்தது தகவல்..!

சுருக்கம்

dd divource news

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளவர்  டிடி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவருடைய கலகலப்பான பேச்சுக்கு ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலருமே ரசிகர்கள் தான்.

இந்நிலையில் இவருக்கும் இவருடைய குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவருக்கும், கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு இவர்களை வாழ்த்தினர்.

கடந்த ஆண்டே டிடிக்கும் இவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக  மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து டிடி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார்.

ஆனால் தற்போது டிடி மற்றும் அவருடைய கணவர் இருவருமே பரஸ்பர விவாகரத்து கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே டிடி இவர்களுடைய பிரிவை உறுதி படுத்தும் வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ப.பாண்டி படத்தில் இவருடைய பெயருக்கு முன்னால் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இவர்கள் பிரிவிற்குக் காரணம் எனக் கூறப்படுவது, டிடி சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது தான் என்று கூறப்படுகிறது. மேலும் டிடியின் பெயர் சுசி லீக்சிலும் அடிபட்டது இவருக்கும் இவருடைய கணவருக்கும் இருந்த விரிசலை அதிகப்படுத்தி இன்று விவாகரத்து வரை அழைத்து வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!